News November 16, 2025
தனியார் பஸ் கட்டணம் உயரப் போகிறது

டீசல் விலை உயர்வு, அரசின் இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை மாற்றி அமைக்க, தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையின் போது, கட்டண உயர்வு தொடர்பாக 950 பரிந்துரைகள் வந்துள்ளதாகவும், இது குறித்து டிச.30-க்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இதையடுத்து, 2026 ஜன.6-ம் தேதி இறுதி முடிவை தாக்கல் செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
Similar News
News November 16, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீருடன் இறுதி அஞ்சலி

மக்கள் இயக்குநர் என்று போற்றப்பட்ட திரைப்பட இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடலுக்கு கம்யூ., கட்சியின் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர்களும், சேரன் உள்ளிட்ட இயக்குநர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு, சொந்த ஊரான திருவண்ணாமலை நெய்வானத்தம் கிராமத்தில் இன்று நடைபெறவிருக்கிறது.
News November 16, 2025
Apple CEO பதவியில் இருந்து விலகுகிறாரா டிம் குக்?

Apple CEO-வாக இருக்கும் டிம் குக் அடுத்த ஆண்டில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14 ஆண்டுகளாக CEO-வாக இருக்கும் இவருக்கு, 65 வயதாகிவிட்டது. இதனால் அவர் ஓய்வு பெறலாம் என பேசப்படுகிறது. அத்துடன் இன்னும் சிலருடைய பதவிகளை மாற்ற திட்டம் இருக்கிறது என்கின்றனர். மேலும், நிறுவனத்தின் Vice President-ஆக இருக்கும் ஜான் டெர்னஸ் அடுத்த CEO-வாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News November 16, 2025
BJP, காங்கிரஸ் தமிழகத்துக்கு தேவையில்லை: சீமான்

கருணாநிதி, MGR, ஜெயலலிதா ஆகியோரை பார்த்து தான் அரசியல் செய்ய வரவில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். மக்களின் வாக்கு தரத்தை மாற்ற நினைப்பதால், தங்களுக்கு (நாதக) யாரும் போட்டியில்லை என்றும் உறுதிபட கூறினார். மேலும், தமிழகத்தில் தேசிய கட்சிகளான BJP, காங்.,க்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பிய அவர், தேசிய கட்சிகள் எந்த மாநிலத்திற்கும் தேவையில்லை என்று ஆவேசமாக பேசினார்.


