News August 16, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலையில் உள்ள க.சொ.க.கண்ணன் பாலிடெக்னிக் கல்லூரியின் வளாகத்தில் ஆகஸ்ட் 18 காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படித்த மாணவ மாணவிகள் வரை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
அரியலூர்: குடும்ப வன்முறையா? உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, அரியலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News August 16, 2025
அரியலூர்: அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை நீட்டிப்பு

2025-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT NOW…
News August 16, 2025
அரியலூர் மாவட்டம் இரவு ரோந்து விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.