News January 24, 2025
தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் அப்துல்லா அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற ஜனவரி 25ஆம் தேதி நாளை (சனிக்கிழமை) தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10, 12, ITI, DIPLOMA, DEGREE ஆகிய கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
வேலூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த அறிவுக்கரசி (35). இவரது கணவர் குறளமுதன் இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அறிவுக்கரசி கந்தனேரி பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அறிவுக்கரசி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 17, 2025
வேலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

வேலூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 17, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் , (செப் 16) அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க