News January 6, 2025
தனியார் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு

கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 20 வயது பெண். திருச்சி தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிந்தநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றி மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
குளித்தலை அருகே விஷம் குடித்து தற்கொலை!

கரூர் மாவட்டம் குளித்தலை, நச்சலூர், கீழ நந்தவனக்காடு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 76) கடந்த இரண்டு நாட்களாக வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பூச்சி மருந்து குடித்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மகன் அழகுராஜ் புகாரில் நங்கவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
News January 22, 2026
கரூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
கரூர் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


