News April 17, 2025

தனித்துவ அடையாள எண் காலக்கெடு நீட்டிப்பு

image

குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பி எம் கிஷான் பயனாளிகளில் இதுவரை ஒரு லட்சத்து 2000 பயனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 20,000 அடையாள எண் பெறாத பிஎம் கிஷான் விவசாயிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

குமரி அருகே விபத்தில் ஒருவர் பலி

image

அனந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜிஸ்(21) தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் நித்திரவிளை – விரிவுரை சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் அஜிஸ் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்த நிலையில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 7, 2025

குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

குமரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News November 7, 2025

குமரியில் நூதன முறையில் நகை பறிப்பு

image

வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் தங்க லட்சுமி(70). இவரது மகன் இருதய சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க தங்க லட்சுமி வந்த போது ஒருவர் அடையாள அட்டை கிடைத்தால் சிகிச்சைக்கு பணம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி அவர் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை கழற்றி வாங்கி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!