News January 24, 2026
தனிக்கட்சி தொடங்கி விஜய்யுடன் கூட்டணியா?

சமீபத்தில் வைத்திலிங்கம் தவெகவில் இணைந்து OPS-க்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த வரிசையில் தற்போது OPS உடன் அரசியல் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், ’MGR அதிமுக’ என புதிய கட்சியை தொடங்கி தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கூட்டணி தொடர்பாக OPS எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால் எரிச்சலடைந்த இவர் இம்முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Similar News
News January 24, 2026
தங்கம், வெள்ளி.. இன்று ஒரே நாளில் ₹10,000 மாறியது

<<18941567>>தங்கம் விலையை<<>> தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று (ஜன.24) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹10 உயர்ந்து ₹355-க்கும், 1 கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹3.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நேற்று காலை கிலோவுக்கு ₹20,000 உயர்ந்த வெள்ளி விலை மாலையில் ₹15,000 குறைந்தது. இந்நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News January 24, 2026
யாரும் எதிர்கொள்ளாத நெருக்கடி எனக்கு: CM ஸ்டாலின்

அண்ணா, கருணாநிதி, MGR, ஜெ., ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை தமிழக கவர்னரின் செயலால் தான் எதிர்கொள்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய CM, கவர்னர் உரைக்கு பதிலளிக்க வேண்டிய தான் விளக்கமளிக்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். யாரும் தங்களுக்கு தேசபக்தி பற்றி பாடம் எடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை என கவர்னருக்கு அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் என காட்டமாக தெரிவித்தார்.
News January 24, 2026
அதிமுக சின்னம் தொடர்பான வழக்கில் நடவடிக்கை: ECI

அதிமுக சின்னம் ஒதுக்கீடு, கட்சி பெயர், கொடி, தலைமைத்துவம் தொடர்பாக பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக ECI, டெல்லி HC-ல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவில்லை என புகழேந்தி என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ECI தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விஷயங்களும் முழுமையாக ஆராயப்படுவதாகவும் கூறியுள்ளது.


