News January 26, 2026
தனது நண்பருக்கு CM ஸ்டாலின் சிறப்பு வாழ்த்து!

தமிழகத்தில் இருந்து பத்ம விருது பெறத் தேர்வான அனைவருக்கும் CM ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக பத்ம பூஷன் விருது பெறும் டென்னிஸ் வீரரும், தனது நண்பருமான விஜய் அமிர்தராஜுக்கும், நடிகர் மம்மூட்டிக்கும் சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் தங்களது துறைகளில் தொடர்ந்து சாதனைகளை படைத்து, சமூகத்திற்கு சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கம் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
4 நாள்களில் வெள்ளி விலை ₹1.25 லட்சம் குறைந்தது

<<19027688>>தங்கத்தை<<>> போன்றே வெள்ளி நகைகளின் விலையும் மளமளவென குறைந்து வருகிறது. கடந்த 4 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹1.25 லட்சம் சரிந்துள்ளது. இதன்படி, சென்னையில் தற்போது, வெள்ளி 1 கிராம் ₹300-க்கும், 1 கிலோ ₹3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதே சந்தை நிலவரம் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பதால், இன்றும் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 3, 2026
கூட்டணிகளை அடிமை போல நடத்தும் திமுக: செல்லூர் ராஜு

அதிமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக் கணிப்புகளை பார்த்து திமுக கலக்கமடைந்துள்ளது என செல்லூர் ராஜு கூறியுள்ளார். திமுக தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைபோல் வைத்துள்ளது என விமர்சித்த அவர், அதனால்தான் அவர்கள் மக்கள் பிரச்னைகளைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளதாகவும் பேசியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அவர்கள் சொன்னதையெல்லாம் திமுக நிறைவேற்றினார்கள் எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.