News September 15, 2024
தனது இல்லத்தில் திமுக கொடி ஏற்றிய எம்.பி.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழாவினை முன்னிட்டு திமுகவினர் வீடுகள் தோறும் திமுக இரு வண்ணக் கொடியை பறக்கவிட வேண்டும் என்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை இன்று (செப்.15) தனது இல்லத்தில் திமுக இரு வண்ணக் கொடியினை ஏற்றினார். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News August 25, 2025
திருவண்ணாமலை பின்னணியில் புதிய திரைப்படம்

பிக் பாஸ் ராஜு நடித்த ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை தயாரித்த சுரேஷ் சுப்பிரமணியன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தி.மலை பின்னணியில் ஆன்மிக திரில்லர் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து அவர் திருவண்ணாமலை பின்னணி கதையில் பிரபலமான நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம் என்றார். தி.மலை பின்னணியில் புதிய படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
News August 25, 2025
வயிற்று வழியால் முதியவர் தற்கொலை

குத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தசாமி(வயது 75). கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்ததார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா்,ஆக.20ம் தேதி பூச்சி மருந்து குடித்து விட்டு வீட்டில் மயக்க நிலையில் இருந்துள்ளாா். குடும்பத்தினா் முதியவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று உயிரழந்தார். மோரணம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனர்.
News August 24, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-24) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.