News February 22, 2026

தந்தை VS மகன்.. KAS-ஐ வீழ்த்த அதிமுக திட்டம்!

image

அவினாசியில் அதிமுகவுக்கு ஆட்டம் காட்டவே ப.தனபாலின் <<19202348>>மகன் லோகேஷை<<>> செங்கோட்டையன் தவெகவுக்கு இழுத்துள்ளார். வரும் தேர்தலில் அவரை களமிறக்கவும் தலைமைக்கு சிபாரிசு செய்துள்ளாராம். ஆனால், அவரது வியூகத்தை முறியடிக்க அதிமுக தலைமை மீண்டும் தனபாலுக்கு சீட்டு கொடுக்க ஆலோசித்து வருகிறதாம். EX சபாநாயகர் தனபால், 1977, 1980, 1984, 2001, 2011, 2016, 2021 என 7 தேர்தல்களில்(ராசிபுரம், சங்ககிரி, அவினாசி) வென்றவர்.

Similar News

News February 28, 2026

ஊசி நூலில் உலகை அழகாக்குபவர்கள் தினம்!

image

ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். அரை மனிதனை நேர்த்தியாக நெய்த உடையின் மூலம் முழு மனிதனாக்குபவர்கள் தையல்காரர்கள். சமூகத்தின் அவர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக நவீன தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த வில்லியம் ஏலியஸ் ஹோவின் பிறந்தநாளான பிப். 28-ம் தேதி உலக தையல்காரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஃபேஷன் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாரம்பரியத்தையும் பாதுகாப்புக்கும் அவர்களின் பங்களிப்பை போற்றுவோம்!

News February 28, 2026

BREAKING: விஜய்க்கு அடுத்த ஷாக்

image

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் காங்.,க்கு எத்தனை தொகுதி என்பது பற்றி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை வந்த கிரிஷ் சோடங்கரிடம், தவெகவுடன் கூட்டணியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்புவது தேவையற்றது என்று பதிலளித்தார். இதனால், தங்களுடன் கூட்டணி வைக்கலாம் என காத்திருந்த விஜய் தரப்புக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News February 28, 2026

தேமுதிக நழுவியதால் EPS-ன் மாற்று பிளான்

image

கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் அன்புமணியின் எதிர்ப்பையும் தாண்டி, ராமதாஸை கூட்டணியில் சேர்க்க EPS-ம் தற்போது விருப்பம் காட்டுகிறாராம். இதனால், இவ்வளவு நாள் தனித்து விடப்பட்ட ராமதாஸிடம் அதிமுக, பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ராமதாஸும் நாளைக்குள் முடிவை அறிவிப்பதாக பதிலளித்திருக்கிறார் என்கின்றனர்.

error: Content is protected !!