News March 25, 2025

தந்தை இறங்கிய நேரத்தில் குழந்தையுடன் சென்ற பேருந்து

image

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் சென்ற அரசு பஸ்சில் ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை தனியாக அமர்ந்திருந்தது. இதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் பஸ்சில் இடம் பிடிக்க குழந்தையுடன் ஏறிய தந்தை, குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News August 5, 2025

மயிலாடுதுறை: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

image

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அரசு வேலைக்கு நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க!

News August 5, 2025

மயிலாடுதுறை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

100 ஆண்டுகள் பழமையான கிணறு தூர்வாரும் பணி

image

திருவெண்காடு அருகே மணிக்கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆகஸ்ட் 29ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள 100ஆண்டுகள் பழமையான கிணறு துர்ந்து போய் பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விரும்பினர். இதனைத் தொடர்ந்து கிணறு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

error: Content is protected !!