News June 15, 2024

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

image

ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்த முகமது இக்பாலை அவரது மகன் இம்ரான் கொலை செய்தார். இந்த வழக்கு ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செல்வம் கொலை குற்றம் சாட்டப்பட்ட இம்ரானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபாராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். வழக்கை திறம்பட விசாரித்த அப்போதைய ஆய்வாளர் விநாயகமூர்த்தியை எஸ் பி கிரண்ஸ்ருதி பாராட்டினார்.

Similar News

News March 1, 2026

ராணிப்பேட்டை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

‘திராவிட சூரியனே!’ – முதல்வருக்கு ஆர்.காந்தி உத்வேக வாழ்த்து

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை (மார்ச்.1) முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். “திராவிட சூரியனே!” எனப் புகழ்ந்துரைத்த அவர், முதல்வர் மக்கள் நலன் கருதி நீண்ட காலம் சேவை செய்ய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார். கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாகத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News March 1, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக்.

error: Content is protected !!