News March 18, 2025
தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தேர்வு எழுத சென்ற மகன்

சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள செங்கரடு பகுதியில் வசித்து வந்த கணேசன் என்பவர் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 18) காலமானார். தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மகன் மணிகண்டன், தனது தந்தையின் கனவை நிறைவேற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு உறவினர்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News September 13, 2025
சேலம்: 148 பணியிடங்களுக்கு 4000 பேர் விண்ணப்பம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எழுத்துத் தேர்வு வரும் அக்.11- ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 13, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.13) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 13, 2025
சேலம்: சிசிடிவி கேமராக்கள் மூன்றாவது கண்!

சேலம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் அனைவருக்கும் உதவியாக உள்ளது. தெருக்கள், கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குற்றத்தடுப்பிலும், குற்றங்களை கண்டறிவதிலும் உற்ற நண்பனாய் விளங்கும் சிசிடிவி கேமிராக்களை நிறுவி பாதுகாப்பை மேம்படுத்துவோம்.