News May 15, 2024

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

image

கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது குழந்தை சுஷ்மிதா (1). நேற்று (மே 14) குழந்தை சுஷ்மிதா விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News July 11, 2025

சென்னை – வேலூர் 1 மணி நேரத்தில் செல்லலாம்

image

சென்னை – வேலூருக்கு இடையே (140 கி.மீ.) RRTS ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ‘பாலாஜி ரயில் ரோடு’ என்ற நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 20 நிமிடத்திலும், வேலூருக்கு 1 மணி நேரத்திலும் பயணிக்கலாம். மெட்ரோவைவிட 3 மடங்கு அதாவது 180 கி.மீ. வேகத்தில் செல்லும். ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

பெண்ணிடம் செல்போனை பறித்த சென்ற வாலிபர்

image

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக பஸ்சில் பெண் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது அவர் கையில் வைத்து இருந்த செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். சக பயணிகள் துரத்தி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து வேலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்‌. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News July 10, 2025

வேலூரில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!