News May 2, 2024
தண்ணீரை மாசு படுத்தினால் கடும் தண்டனை
கோவையில் பல்வேறு அணைகள் நீர் இல்லாமல் வரண்டுள்ளன. இந்நிலையில், தமிழக மக்கள் ஆனைகட்டி வழியாக வந்து கேரள நீர் நிலைகளை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சோலையூர் ஊராட்சி நிர்வாகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழக மக்கள் கேரள நீரை மாசு படுத்தும் பட்சத்தில் 6 மாதம் முதல் 8 மாதம் சிறை தண்டனையும் 10000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
Similar News
News November 20, 2024
கோவை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண் குறித்த விபரங்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.
News November 20, 2024
கோவை: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்
கோவை மாவட்டத்தில் இன்று இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
News November 20, 2024
கோவை: இன்றைய தலைப்பு செய்திகள்
➤ஆசிரியர் கொலை: அரசை சாடிய வானதி சீனிவாசன் ➤கோவையில் 65 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம் ➤பசுமை கோவை செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் ➤துக்க வீட்டில் தீ விபத்து: பலி 3 ஆக உயர்வு ➤ஹாக்கி மைதானம் அமைக்க அமைச்சர் ஆய்வு ➤கோவை வந்தடைந்த செந்தில் பாலாஜி ➤நேரு கல்விக் குழுமம் ரூ.4 கோடி சொத்து வரி பாக்கி ➤கோவை சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு ➤கல்வி உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு.