News April 13, 2025

தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

image

பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் குமரேசன் வயது (16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று (ஏப்ரல்.12) மாலை, நகரி திண்டிவனம் ரயில் பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 14, 2025

திடீர் மின் தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 14, 2025

திருவள்ளூரில் அரசு வேலை; நாளையே கடைசி

image

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய நல்வாழ்வு திட்டத்தில் செயல்படும் மாவட்ட நலச் சங்கத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,000- 60,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து நாளை(ஏப்.15)க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

குடும்ப ஐஸ்வர்யம் அருளும் திருத்தணி முருகர்

image

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகும். நாளை தமிழ் புத்தாண்டு அன்று முருகனை வணங்கினால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் கிட்டுமாம். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!