News June 21, 2024
தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி பலி

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கென்னடி குப்பத்தை சேர்ந்தவர் முருகேசன் (79). இவருக்கு காது கேட்காது. இந்நிலையில் இன்று விண்ணமங்கலம் அருகே தண்ணீர் எடுக்க தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது போடிநாயக்கனூர்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர்.
Similar News
News August 30, 2025
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், பொதுமக்கள் சாலையோரம் வாகனங்களின் கதவை திறக்கும் முன், பின்னால் வாகனங்கள் வருகிறதா என நன்கு கவனித்து வாகனத்தின் கதவை திறக்கவும் என விழிப்புணர்வு பதிவிட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துங்கள்.
News August 30, 2025
திருப்பத்தூர்: ஓட்டல்களில் உணவு சரியில்லையா?

திருப்பத்தூர் மக்களே, ஓட்டல்களில் தரமற்ற/சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. உணவில் பழைய இறைச்சியை பயன்படுத்தினாலோ, உணவில் கலப்படம் செய்தலோ, ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் சமைத்தாலோ, பழைய காய்கறி/எண்ணெயை பயன்படுத்தினாலோ நீங்கள் இந்த எண்ணில் (9444042322) புகார் செய்யலாம். இதில் ஓட்டலுக்கு 1-10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News August 30, 2025
திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்!

திருப்பத்தூர் மக்களே, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 30) மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு இலவச மருத்துவ முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயம், எழும்பியல், நரம்பியல், ENT, மகப்பேறு, பல், மனநலம், குழந்தை நல மருத்துவம், நுரையீரல் சார்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!