News February 11, 2025

தண்டவாளத்தில் விளையாட்டுத்தனம் காட்டக்கூடாது – ரயில்வே 

image

நெல்லை சந்திப்பு ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் கற்களை வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும். விளையாட்டு தனத்தை ரயில் வழித்தடத்தில் காட்டக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

திருநெல்வேலி: கம்மி விலையில் சொந்த வீடு – APPLY!

image

திருநெல்வேலி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு க்ளிக் செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 4, 2026

திருநெல்வேலி வரும் தவெக தலைவர் விஜய்

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அடுத்த நிகழ்ச்சியை மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக வினர் தெரிவித்துள்ளனர்.

News March 4, 2026

நாங்குநேரி சம்பவம்; பொதுமக்கள் ஏன் உதவவில்லை? – விளக்கம்

image

நாங்குநேரியில் சாலையில் செல்பவர்களை அரிவாளால் வெட்டி கொடூர தாண்டவம் ஆடிய கும்பல் பைக்குகளில் மஞ்சங்குளத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் பெயரை(அவரது சமூகத்துடன்) சத்தமாக கூறி வாழ்க கோசமிட்டனர். அப்போது பைக்கில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். அவரை தூக்கி விட முயன்ற அப்பகுதி மக்களை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் உதவிக்கு வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

error: Content is protected !!