News April 15, 2025

தண்டவாளத்தில் உடற்பயிற்சி இரும்பு மனிதன் கைது

image

நாகர்கோவில் அருகே தாமரைக் குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் இரும்பு மனிதன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட சமூக வலைதளங்களில் இது பரவியது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று (ஏப்.15) கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Similar News

News April 17, 2025

குமரி எலக்ட்ரீஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை

image

கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜேஷ். இவரது உறவினரின் மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுந்தரய்யா நேற்று ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News April 16, 2025

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை

image

சுதந்திரப் போராட்ட தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் மார்சல் நேசமணியின் போர்ப்படைத் தளபதியுமாக விளங்கிய பொன்னப்ப நாடாருக்கு நாகர்கோவிலில்ரூ.50 லட்சம் செலவில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அவரது நூற்றாண்டைய ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News April 16, 2025

குமரி மாவட்டத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!