News October 3, 2024
தடை மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு அபராதம்
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மீன் ஆடு மாடு கோழி உட்பட இறைச்சி கடைகளை மூட நகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி புதுவை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி இரண்டு இறைச்சி கடைகளுக்கு தலா ஆயிரம் அபராதமும் உழவர்கரை நகராட்சியில் ஒரு கடைக்கு ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Similar News
News November 20, 2024
வில்லியனூரில் வேளாண் விவசாயிகள் திருவிழா
புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், ஆத்மா திட்டம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து, வேளாண் விவசாயிகள் திருவிழா, நாளை 21ம் தேதி, காலை 9:00 மணியளவில், வில்லியனுார், கோபாலசாமி நாயக்கர் திருமண மஹாலில் நடக்கிறது. தொடர்ந்து, வேளாண் கருத்தரங்கம் நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
புதுகை: நவோதயா பள்ளியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
புதுச்சேரி காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தெரிவுநிலை தேர்வின் அடிப்படையில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நேற்று (19ம் தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி நாள் வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்