News January 5, 2026
தடைகளை உடைத்து கல்வியை வழங்கும் அரசு: விஜய் சேதுபதி

ஒரு தலைமுறை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றால், கல்வி மிக முக்கியம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பேசிய அவர், தமிழக அரசு தடைகளை உடைத்து, ஒரு தலைமுறைக்கான கல்வியை வழங்கி, முன்னோக்கி நகர்த்தி வருவதாக குறிப்பிட்டார். இந்த பணியை அரசு நீண்ட காலமாக செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
Similar News
News February 13, 2026
ரஷ்யாவில் Whatsapp-க்கு தடை

ரஷ்யா Whatsapp-ஐ தடை செய்ததை உறுதிப்படுத்தியுள்ளது. பயனர்கள், உள்நாட்டு மெசஞ்சர் செயலியான ‘மேக்ஸ்’-க்கு மாறும்படி கூறி வந்த நிலையில், தற்போது இந்த தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். மேலும், Telegram மீது படிப்படியாக கட்டுப்பாடுகளை விதிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 13, 2026
கட்சித் தாவப்போகும் EPS-ன் தளபதிகள்

அதிமுகவில் இருந்து யார் எப்போது வெளியேறுவார்கள் எனத் தெரியாமல் EPS பயத்தில் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். அதிமுகவின் முக்கிய தூண்களாக இருக்கும் வேலுமணி, தங்கமணி போன்றோர் திமுகவுக்கு செல்லலாமா அல்லது தவெகவிற்கு செல்லலாமா என்று திட்டமிட்டு வருவதாகவும், செங்கோட்டையன் (TVK), அன்வர்ராஜா(DMK) போல, விரைவில் EPS-ன் தளபதிகள் வேறுக்கட்சிக்கு செல்லவுள்ளதாகவும் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.


