News March 26, 2024
தடங்கம் அருகே திடீர் தீவிபத்து

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் ஊராட்சி, லப்பர்சி காலனி அருகே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (போ) பா. வெங்கடேஷ் தலைமையிலான குழு, குழாய் வழியாக தண்ணீரை பீச்சு அடித்து கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News February 13, 2026
, அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை

இன்று காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியில் மகாசக்தி மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அம்மன் தங்க நகை, குத்துவிளக்கு உட்பட பூஜை பொருட்கள் மற்றும் காணிக்கை பணம் ஒரு லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 12, 2026
கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர்கள்
தகுதி வாய்ந்த B.V.Sc படித்து (Tamil Nadu State Veterinary Council) பதிவு பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போலி கால்நடைமருத்துவர்கள், பராம்பரிய வைத்தியர்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.எனத தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்தார்.
News February 12, 2026
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பிப்-12 தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், தவில்,வயலின்,மிருதங்கம்,வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்து வகையான நிகழ்த்துக் கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டக் கலைஞர்கள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0427-2386197 தொடர்புகொண்டு விண்ணபிக்க வேண்டும்.ஆட்சியர் சதிஸ் தகவல் தெரிவித்தார்


