News September 10, 2025
தஞ்சை: B.E./B.Tech முடிச்சிட்டிங்களா? ரூ.50,000 சம்பளம்!

தஞ்சை பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News September 10, 2025
ஆதி கும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் தேதி?

மகாமக திருவிழா தொடர்புடைய கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயிலுக்கு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திங்கள் கிழமை சுபயோக சுபதினத்தில் காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் குடமுழுக்கு நடத்துவதற்கு திருக்கோயில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அறங்காவலர்களால் நாள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
News September 10, 2025
தஞ்சை: வெடிகுண்டு சம்பவத்தில் 2 பேர் கைது

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கில், திருவிடைமருதூர் கீழதூண்டி விநாயகன் பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டனின், அண்ணன் மகேஷ் மற்றும் இதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மற்ற குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
News September 10, 2025
தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் மணக்கரம்பை ஊராட்சி ஆதிதிராவிடர் நல அரசினர் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்வித்தரம் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளனர்.