News October 3, 2025
தஞ்சை: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
Similar News
News October 3, 2025
தஞ்சை: தாயுடன் சண்டை; வாலிபர் தற்கொலை

பட்டுக்கோட்டை ஆர்வி நகரைச் சேர்ந்த விஜய் (30), பி.இ. படித்துவிட்டு டீக்கடை நடத்தி வந்தார். தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 3, 2025
தஞ்சை: ஆற்றில் மூழ்கி பள்ளி சிறுவன் பரிதாப பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தம் ராஹத்ஹமீது(11). இவர் 6ம் வகுப்பை படித்து வந்தார். பள்ளி விடுமுறை நாளான நேற்று முன்தினம் முக்கொம்பு சுற்றி பார்க்க வந்தவர் காவிரி ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து முக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கல்லணை அருகே அகரப்பேட்டை வெண்ணாற்றில் இறந்த நிலையில் ராஹத்ஹமீது உடலை போலீசார் மீட்டனர்.
News October 3, 2025
தஞ்சை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க