News March 21, 2024

தஞ்சை: 6 முறை எம்பியாக இருந்தவருக்கு வாய்ப்பு மறுப்பு!

image

2024 மக்களவை தேர்தலில், தஞ்சாவூர் தொகுதிக்கு திமுக சார்பில் புதுமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரசொலி, இளங்கலை பட்டப் படிப்பும், இளங்கலை சட்டப்படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனி மாணிக்கம் எம்பிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் 6 முறை போட்டியிட்டு வென்று எம்பியானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 9, 2025

கோடி நலம் தரும் தஞ்சை கோடியம்மன் ஆலயம்

image

தஞ்சை – திருவையாறு செல்லும் வழியில் இந்த கோடியம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் கோடி அவதாரம் எடுத்து அரக்கர்களை வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு கோடியம்மன் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருமண தடை, மகப்பேறு கிடைக்க பெண்கள் வழிபடுகின்றனர். மேலும் இந்த அம்மனை வணங்கினால் கண் திருஷ்டி, பணக் கஷ்டம் போன்ற அனைத்தும் நீங்கும் என கூறுகின்றனர். இதை SHARE செய்யவும்.

News April 9, 2025

நடுக்காவேரி காவல்நிலையம் முன் பெண் தற்கொலை

image

நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரை விசாரணைக்காக நடுக்காவேரி காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் தனது சகோதரனை வெளியே விட வலியுறுத்தி தினேஷின் சகோதரிகள் மேனகா, கீர்த்திகா, ஆகிய இருவரும் காவல் நிலையம் முன்பே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 9, 2025

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

image

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025-ம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) தொடங்கப்பட உள்ளது. இதற்கு www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க 

error: Content is protected !!