News October 16, 2025

தஞ்சை: 6 பேர் மீது பாயிந்த குண்டர் சட்டம்

image

ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக நிர்வாகியுமான ம.க.ஸ்டாலினை சணல் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய், மருதுபாண்டி, மகேஷ், சேரன், விஜய், ஆகாஷ் ஆகிய ஆறு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 16, 2025

தஞ்சை: கஞ்சா விற்பனையில் ஐந்து நபர்கள் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் அதே பகுதியை சார்ந்த தாஸ், ராஜமாணிக்கம், அஸ்வின், சஞ்சய், வீரமணி ஆகியோரின் இல்லங்களில் சோதனை நடத்தியதில் 1.100 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.15,000 கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட 5 நபர்களை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

News October 16, 2025

தஞ்சை: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>> . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

தஞ்சை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

தஞ்சாவூர் மாநகராட்சியில் காமாட்சி மஹால், கும்பகோணம் மாநகராட்சியில் மூர்த்தி கலையரங்கம் மற்றும் பேராவூரணி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் இன்று (அக்.16) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ளன. மேலும், மன்னார்சமுத்திரம் அங்காளம்மன் கோவில் மண்டபத்திலும், திருக்கருக்காவூர், மங்களம் மஹாலிலும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!