News January 11, 2026

தஞ்சை: 510 பேருக்கு பணி நியமன ஆணை

image

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நேற்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில் 2,172 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட 510 பேருக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பணி நியமண ஆணைகளை வழங்கினார். மேலும், 355 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கும், 79 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News February 11, 2026

மாணவ-மாணவிகளை பாராட்டிய ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் வாரவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் கு.சந்திரன் உடன் இருந்தனர்.

News February 11, 2026

தஞ்சை: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

image

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற விபத்து வழக்கு தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் விசாரணை அதிகாரியாக இருந்து வந்துள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்‌. இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News February 11, 2026

தஞ்சை: இனி வீட்டிலிருந்தபடியே ஆதார் அட்டை!

image

தஞ்சை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!