News December 20, 2025
தஞ்சை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவைக்காவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அரவிந்தராஜ், ஹரிராஜா, வெங்கடேசன், ஜெயவேல் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News December 21, 2025
தஞ்சை: போலி நகைகளை அடகு வைத்து மோசடி

திருவையாறு, கண்டியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் அடகு கடையில் போலி தங்க நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் காரைக்கால் பகுதியை சேர்ந்த சிவா(26), ஸ்ரீராம் (21) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
News December 21, 2025
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

தஞ்சை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
தஞ்சை ஆட்சியர் பெயரில் போலி முகநூல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவரது பெயரில் போலி முகநூலில் கணக்கு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனை யார் தொடங்கியது என்பதை, தஞ்சாவூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை யாரும் பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


