News March 19, 2024

தஞ்சை: 45 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 103 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்கட்டமாக 90 துணை ராணுவ வீரர்களை கொண்ட ஒரு கம்பெனி தஞ்சைக்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 45 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

Similar News

News February 3, 2026

பாபநாசத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. திடீர் திருப்பம்

image

திருப்பாலைத்துறை அவுல்கார தெரு சந்து பகுதியில் கடந்த வாரம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து இடந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர் திருப்பாலைத்துறை வெள்ளை பிள்ளையார் தெருவை சேர்ந்த முகமது அலி என்பதும், உடல்நலக்குறைவால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

News February 3, 2026

தஞ்சை வந்தடைந்த 1,300 டன் பொட்டாஷ் உரம்

image

தஞ்சை மாவட்டத்தில் முப்போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக, தூத்துக்குடியில் இருந்து 1300 டன் பொட்டாஷ் உரம் நேற்று ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த உரங்கள் தனியார், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளுக்காக இந்த உரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

News February 3, 2026

தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

தஞ்சை மக்களே! இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் தஞ்சை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!