News December 14, 2025
தஞ்சை: 3,371 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு பெற தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 5098 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 3371 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 19 கோடியே 93 லட்சத்து 11 ஆயிரத்து 347 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.
Similar News
News March 2, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்.01) இரவு 10 முதல் இன்று (மார்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 1, 2026
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 1, 2026
தஞ்சை பெரிய கோயில் நடை மூடல்

தஞ்சை பெரிய கோயிலின் நடை வரும் 3ம் தேதி அன்று சந்திர கிரகணத்தை காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 7.30 மணிக்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் வழிபாட்டிற்காக நடை திறக்கப்படும் என்று தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


