News March 14, 2025

தஞ்சை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற Way2News!

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், Way2News சார்பில் சுரேஷ், சிங்காரவேலு, மதன் ஆகியோர் கலந்து கொண்டு தஞ்சை பகுதியைச் சேர்ந்த சுமார் 8 இளைஞர்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணை, மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பரமேஸ்வரி தலைமையில் வழங்கப்பட்டது.

Similar News

News April 14, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்கப் பதிவு செய்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு வாக்குப்பதிவு குழுவினர் இன்று முதல் வருகை தருவர். எனவே, வாக்காளர்கள் இந்த வசதியைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

News April 14, 2026

தஞ்சாவூர்: 450 நெல் மூட்டைகள் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி அருகே மண்டல ஆய்வு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த லாரியில் சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி 450 நெல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News April 14, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு 10 முதல், இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!