News September 30, 2024
தஞ்சை வந்த 1,462 டன் உரம்
சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலமாக 1,462 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி சூப்பர் உரம் 21 பெட்டிகளில் தஞ்சாவூருக்கு நேற்று வந்து இறங்கியது. பின்னர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Similar News
News November 20, 2024
கும்பகோணம்: துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்ட்
சோழபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் கடந்து 2016 ஆம் ஆண்டும் அவரது மகன் சுகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் சரவணன் தற்போது நீலகிரியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.
News November 20, 2024
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ட்ராமா ரெஜிஸ்ட்ரி அசிஸ்டன்ட்- 1 தேவை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தற்காலிக வேலை என்றும், நிரந்தர பணி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய கல்வித்தகுதி உடையவர்கள் கல்விச்சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாள் 25 ஆம் தேதி.
News November 19, 2024
தஞ்சையில் பொது ஏலம் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். பொது ஏலமானது, 20ஆம் தேதி நாளை 10.00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோர்ட் சாலை, பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.