News November 7, 2025
தஞ்சை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
Similar News
News February 11, 2026
மாணவ-மாணவிகளை பாராட்டிய ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் வாரவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் கு.சந்திரன் உடன் இருந்தனர்.
News February 11, 2026
தஞ்சை: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற விபத்து வழக்கு தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் விசாரணை அதிகாரியாக இருந்து வந்துள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News February 11, 2026
தஞ்சை: இனி வீட்டிலிருந்தபடியே ஆதார் அட்டை!

தஞ்சை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <


