News December 28, 2025
தஞ்சை: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News January 3, 2026
தஞ்சை: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

கண்டிதம்பட்டு உச்சி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). கொத்தனாரான இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், ஈச்சன்விடுதி வழியாக செல்லும் கல்லணைக்கால்வாயின் மெயின் வாய்க்காலில் சதீஷ்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
News January 3, 2026
தஞ்சை மாவட்டத்தில் 464 இடங்களில் தீவிபத்து!

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டு தீப்பிடித்ததாக தஞ்சை, கும்பகோணம், திருக்காட்டுப் பள்ளி, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு மொத்தம் 464 தகவல்கள் வந்தன. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணைத்ததால் ரூ.3 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரத்து 400 மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன. ரூ.24 லட்சத்து 70 ஆயிரத்து 900 மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
News January 3, 2026
தஞ்சை: ரயிலில் அடிபட்டு துடிதுடித்து பலி!

தஞ்சை ரெயில் நிலையத்திற்கும் குடிகாடு ரெயில் நிலையத்திற்கும் இடையில் 300 மீட்டர் தொலைவில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் செம்மொழி விரைவு ரெயிலில் அடிபட்டு பலியானார். இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதிய வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.


