News January 3, 2026

தஞ்சை: ரயிலில் அடிபட்டு துடிதுடித்து பலி!

image

தஞ்சை ரெயில் நிலையத்திற்கும் குடிகாடு ரெயில் நிலையத்திற்கும் இடையில் 300 மீட்டர் தொலைவில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் செம்மொழி விரைவு ரெயிலில் அடிபட்டு பலியானார். இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதிய வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 23, 2026

தபால் நிலையத்தில் பாலிசிதாரர்களுக்கு சிறப்பு முகாம்

image

தஞ்சை கோட்ட தபால் துறை முதல் நிலை கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில், காலாவதியான பாலிசிகளை சலுகைடன் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பாலிசிதாரர்கள் தங்களுடைய காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

தஞ்சை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 23, 2026

தஞ்சை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!