News January 10, 2025
தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி வேண்டுகோள்

தஞ்சை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு, காவல்துறை, அரசு போக்கு கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
Similar News
News August 20, 2025
தஞ்சை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

தஞ்சை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <
News August 20, 2025
திருப்பனந்தாள் காசி மடத்தின் மடாதிபதி காலமானார்

திருப்பனந்தாளில் காசி மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் 21-வது அதிபராக “கயிலை மாமுனிவர்”, ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார் சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) உள்ளார். இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீ காசி மடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972-ல் ஸ்ரீ காசி மடத்தின் அதிபரானார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
News August 20, 2025
தஞ்சை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460283>>தொடர்ச்சி<<>>