News January 8, 2026

தஞ்சை மாவட்ட கலெக்டர் தகவல்!

image

போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், ரப்பர், டயர் போன்ற பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 27, 2026

தஞ்சை: ஆயுளை நீடிக்கும் விஜயநாதேஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவிஜயமங்கலத்தில் விஜயநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

News January 27, 2026

தஞ்சை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

தஞ்சை மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும். இதை அனைவரும் SHARE பண்ணுங்க..!

News January 27, 2026

தஞ்சை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து பிப்.4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!