News March 12, 2025

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா ? கமெண்ட் செய்யவும்!

Similar News

News March 10, 2026

தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் தஞ்சை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News March 10, 2026

தஞ்சை: திமுக மாநாட்டிற்கு சென்ற பஸ் விபத்து!

image

திமுக சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 12-வது மாநில மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில் நாகூரில் இருந்து திருச்சி நோக்கி திமுக தொண்டர்களுடன் வந்த தனியார் மினி பஸ் ஒன்று தஞ்சை மாவட்டம் விளார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

News March 10, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.09) இரவு 10 முதல் நாளை (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!