News November 1, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

பேரரசர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று (நவ.,01) ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். சதய விழா நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
தஞ்சை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 1, 2025
தஞ்சை: கார் மோதி பரிதாப பலி

தஞ்சை அடுத்த கீழதிருவிழாபட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் (70) சம்பவத்தன்று இரவு திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் புதுக்குடி பேருந்து நிலையம் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது தஞ்சை நோக்கி வந்த கார் ரங்கராஜ் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 1, 2025
தஞ்சை: போக்சோ வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கூகூரை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் கடந்த 2023-ம் ஆண்டு பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 17 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் நாச்சியார்கோவில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5000 அபராதமும் விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.


