News August 31, 2025
தஞ்சை: மது பிரியர்கள் கவனத்திற்கு! கலெக்டர் அறிவிப்பு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை விளைநிலங்கள் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டுச்செல்வதை தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளர்கள் வாங்கி சென்று அருந்திய பின் காலி மதுபான பாட்டில்களை அதே சில்லறை விற்பனை கடைகளில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். SHARE IT
Similar News
News September 3, 2025
தஞ்சாவூர்: டிகிரி போதும், ரூ.27 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

தஞ்சை இளைஞர்களே மத்திய அரசின் தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள 248 காலிப்பணியிடங்களுக்கு நிரப்பப்படவுள்ளது. வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் கணினி அறிவியல்படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. மாத சம்பளமாக ரூ.27,000 முதல் வழங்கப்படும். நீங்களும் இந்த பணிகளுக்கு எளிதில் விண்ணப்பிக்க 01.10.2025 தேதிக்குள் இங்கே <
News September 3, 2025
தஞ்சாவூரில் நாளை மின்தடை பகுதிகள்

தஞ்சாவூரில் நாளை (செப்) 04.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சையில் ஒருசில பகுதிகளில் மின்தடை அறிவிப்புகள் வந்துள்ளது. நாளை தஞ்சாவூரில் மின்தடை ஏற்படும் தாலுக்கா, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகள் என்ன, என்ன என்பதை பார்க்கலாம். ஒக்கநாடு, கீழையூர் மற்றும் சுற்றுவட்டரா பகுதி மற்றும் முல்லக்குடி , குறிச்சி , ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW
News September 3, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (செப்டம்பர் 2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!