News September 4, 2025
தஞ்சை மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

தஞ்சை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <
Similar News
News September 4, 2025
தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, தஞ்சையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 4, 2025
தஞ்சையில் கூட்டுறவு வங்கிகளில் கடன் தீர்வு திட்டம்

தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் 2022, டிசம்பா் 31ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 23 க்குள் கூட்டுறவு சங்கங்களை அணுகி பயன்பெறுமாறு தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT
News September 4, 2025
பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூர் பொது மேலாளர் பி. பால சந்திரசேனா இந்தப் புதிய முயற்சியின் மூலம் பி.எஸ்.என்.எல். பயனர்கள் இனிமேல் சிம் கார்டு இல்லாமல் இணைப்பு பெற முடியும். இதன் தொடக்க கால சலுகையாக இ-சிம் விலை ரூ.1 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை (செப் 15) வரை மட்டுமே என தெரிவித்தார்.