News March 28, 2025
தஞ்சை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News April 3, 2025
தஞ்சையில் வேலை வாய்ப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Sales Executive) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<
News April 3, 2025
சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

தஞ்சை மாநகராட்சி 2025-26 நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல்.30ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5% ஊக்கத்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வரியை வரி வசூல் மையம் மூலமாகவோ அல்லது கியூ.ஆர் கோடு, யூபிஐ, கூகுள் பே போன்ற செயலிகள் மூலமாகவோ செலுத்தலாம் என தஞ்சை மாநகராட்சி அறிவித்துள்ளது.(SHARE பண்ணுங்க)
News April 2, 2025
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்ரூ.538 கோடி கூட்டுறவு கடன்

2024-25ம் ஆண்டுக்கு 585 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 24 வரை ரூ.538.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 4312 19 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.