News March 31, 2024

தஞ்சை:  போலீசார் அணி வகுப்பு

image

நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக. உரிய பாதுகாப்புடன் நடத்த வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். பந்தநல்லூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 14, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

தஞ்சையில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

image

தஞ்சை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம்.SHARE IT NOW

News August 14, 2025

தஞ்சை வந்தடைந்த 2736 டன் உரங்கள்

image

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்குத் தேவையான உரம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மற்றும் சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படுகிறது. அதன்படி ஒடிசாவில் இருந்து சரக்கு ரயிலின் 29 வேகன்களில் 1,800 டன் காம்ளக்ஸ், டி.ஏ.பி. உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இதேபோல் சென்னையில் இருந்து 936 டன் யூரியா உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

error: Content is protected !!