News December 21, 2025

தஞ்சை: போலி கணக்கு – போலீசார் எச்சரிக்கை

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பெயரில் போலியான Facebook முகநூல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த முகநூலில் ஏராளமான பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையின் சார்பாக இது போலியான முகநூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்கை யாரும் பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

தஞ்சை: பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலம் மாரியம்மன் கோயில் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட கவியரசன்(48), திருநாவுக்கரசு(38), பிரசாந்த்(34), ரமேஷ்(39), வசந்தகுமார்(36), நித்துவான்(34) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News December 26, 2025

தஞ்சை: ரோடு சரியில்லையா? சரி செய்ய எளிய வழி!

image

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<>நம்ம சாலை’<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஷேர்

News December 26, 2025

தஞ்சை மக்களே மறந்துடாதீங்க! – கலெக்டர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்துதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் டிசம்பர் 27, 28, ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நிறைவு செய்த படிவங்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!