News November 3, 2025
தஞ்சை: பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

திருவோணம் அருகே அனந்தகோபாலபுரத்தைச் சேர்ந்த முகமது கனி மனைவி பைரோஸ்பேகம் (40), வெள்ளிக்கிழமை இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை நோக்கிச் சென்றபோது, நம்பிவயல் கடைவீதி வேகத்தடையில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News November 3, 2025
தஞ்சை: கோயில் உண்டியலில் திருடியவர் கைது

கபிஸ்தலம் பாலக்கரையில் உள்ள சித்தி விநாயகர் ஆலய உண்டியலை உடைத்து பணம் திருடியதாக திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரை கபிஸ்தலம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் பாபநாசம், திருநீலக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள ஆலயங்களிலும் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதும், அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு தாலிகளை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.
News November 3, 2025
தஞ்சை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ( பத்தாம் வகுப்பு தோல்வி முதல் பட்டப் படிப்பு வரை ) உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்


