News November 6, 2025

தஞ்சை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 6, 2025

தஞ்சை: மினி லாரி மோதி பரிதாப பலி

image

சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (24). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மல்லிப்பட்டினம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிரே வந்த மினி லாரி நிலைதடுமாறி சுந்தரவடிவேல் மீது மோதியது. இதில் காயமடைந்த சுந்தரவடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 6, 2025

தஞ்சை: கல்லணையில் மூழ்கி பரிதாப பலி

image

துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி ( 45). கல்லணைக்கு வந்த இவர் காவிரி ஆற்றின் படித்துறையில் இறங்கி கை, கால் கழுவினார். அப் போது அவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். உடனே கரையில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை தூக்கினர். அப்போது பழனிசாமி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News November 6, 2025

தஞ்சை: ரயில் மோதி துடிதுடித்து பலி!

image

தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் பாதையில் சன்னாபுரம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் கிராம நிர்வாக அலுவலர் கும்பகோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நிகழ்விடத்திற்கு போலீசாருடன் சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!