News February 26, 2026
தஞ்சை: பெண் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை!

கும்பகோணத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது வீட்டில் கடந்த 2021ம் ஆண்டு 36 பவுன் நகைகள் கொள்ளை போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாமரைசெல்விக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News February 26, 2026
தஞ்சை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News February 26, 2026
தஞ்சை: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

தஞ்சை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <
News February 26, 2026
தஞ்சை: வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கடந்த 21ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற ரகுமான் என்பவரிடம் 15 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் வழிப்பறி செய்த தொகை ஹவாலா பணம் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சென்னையை சேர்ந்த மணிகண்டன், பொன் சுரேஷ், தினேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


