News September 13, 2025

தஞ்சை புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

image

தஞ்சாவூர் வருவாய் கோட்ட புதிய கோட்டாட்சியராக நித்தியா இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியர் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று‌ தஞ்சை ராஜ ராஜ சோழன் அருகே மணிமண்டபம் அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியராக நித்தியா பொறுப்பேற்றார். ஏற்கனவே கோட்டாட்சியராக இருந்த இலக்கியா தற்போது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

Similar News

News September 13, 2025

தஞ்சை: கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ கவனிங்க!

image

தஞ்சை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

News September 13, 2025

தஞ்சாவூர்: நாளை பொதுவிநியோக குறைதீர் கூட்டம்

image

செப்டம்பர் 2025 மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று 13.09.2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

தஞ்சையில் பயிற்சி வகுப்புகள் கலெக்டர் அறிவிப்பு

image

தஞ்சையில் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 17ஆம் தேதி தொடங்கியுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!