News October 5, 2025
தஞ்சை: பிணமாக மீட்கப்பட்ட சிறுவன்!

கும்பகோணம் தாராசுரம் வினைத்திருத்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 6ம் வகுப்பு மாணவன் சிவபாலன்(12). அரசலாற்றில் குளிக்கும் போது திடீரென நீரில் மூழ்கி மாயமானார். இதைடுத்து தீயணைப்பு துறையினர் மாயமான சிறுவனை 2 வது நாளாக தேடி வந்த நிலையில் நேற்று மாலை மாதுளம்பேட்டை பாரதியார் நகர் பகுதியில் உள்ள ஆற்றில் சிவபாலன் பிணமாக மீட்கப்பட்டான். இதைடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 7, 2026
தஞ்சை: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

தஞ்சை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <
News April 7, 2026
தஞ்சை: பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் பிரச்சாரம்

அதிமுக கூட்டணியில் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக ரயிலடி பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக மாநகர செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News April 7, 2026
தஞ்சை: இடி தாக்கி மீனவர் உயிரிழப்பு

அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை ஊராட்சியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது காலை 6 மணியளவில் இடி விழுந்ததில் கடலில் வலையில் சிக்கிய நிலையில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கடலோர காவல் படை போலீசார் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இடி தாக்கி மீனவர் உயிரிழந்த இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


