News February 13, 2025

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 13 பேருக்கு அபராதம்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் உத்தரவின்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் பொது இடத்தில் புகைபிடிக்க கூடாது. மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தநிலையில் பொது இடத்தில் புகைபிடித்த 13 பேரிடம் இருந்து அபராத தொகையாக ரூ.1300 வசூலிக்கப்பட்டது.

Similar News

News August 22, 2025

தஞ்சாவூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

image

தஞ்சை மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 18004251757 என்ற எண்ணை அழைக்கலாம். SHARE IT!

News August 22, 2025

தேசிய கொடியை அவமதித்த நபர் கைது

image

கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிந்த வல்லப பந்துலு என்பவர், நாச்சியார் கோவில் பகுதியில் 8 குளங்களை காணவில்லை என பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, தனது இடுப்பில் தேசிய கொடியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது தேசிய கொடிய அவமதித்ததாக வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.

News August 22, 2025

தஞ்சாவூரில் விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு

image

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான, விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!