News December 22, 2025

தஞ்சை: பன்றிகளை சுற்றித்திரிய விட்டால் நடவடிக்கை

image

மதுக்கூர் பேரூராட்சியில் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் விளைநிலங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே, வருகிற 25ஆம் தேதிக்குள் பன்றிகளின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என்றும், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Similar News

News December 27, 2025

தஞ்சை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 27, 2025

தஞ்சை: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை

image

ஒரத்தநாடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த காவல்துறையினர் கண்ணத்தங்குடி கீழையூர் பகுதியை சேர்ந்த எட்வர்ட் அமல்ராஜ் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், 550 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News December 27, 2025

தஞ்சை: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!